--------------------------------
செய்தி-2
20,மார்ச்- 2010
ஐ.நா நிறுவனம் கழிவறை வசதியை பற்றி ஒரு ஆய்வு நடத்திய அதன் விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் தான் 63.8 கோடி மக்கள் கழிவறை வசதி இன்றி வாழும் அவல நிலை நிலவுவதாக கவலை தெரிவித்துள்ளது. அந்த செய்தி....
உலகம் முழுவதும் தற்போது 100 கோடி மக்கள் கழிவறை வசதி இல்லாமல் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.. இந்தியா உட்பட 11 நாடுகளில் அதிகஅளவில் மக்கள் கழிவறை வசதி இல்லாமல் இருக்கின்றனர். இதில் முதலிடத்தில் இருப்பது இந்தியா தான். இங்கு மட்டும் 63.8 கோடி மக்களுக்கு கழிவறை வசதி கிடைக்க வில்லை. இதனைத் தொடர்ந்து இந்தோனேஷியாவில் 5.8 கோடி மக்களும், சீனாவில் 5 கோடி மக்களும், எத்தியோபியாவில் 4.9 கோடி மக்களும், பாகிஸ்தானில் 4.8 கோடி மகக்களும், நைஜீரியாவில் 3.3 கோடி மக்களும் கழிவறை வசதி இல்லாமல் உள்ளனர்.
சூடானில் 1.7 கோடி மக்களும், நேபாளத்தில் 1.5 கோடி மக்களும், பிரேசிலில் 1.3 கோடி மக்களும், நைஜீரியாவில் 1.2 மக்களும், உ<லகின் மற்ற பகுதியில் மொத்தமாக 21.5 கோடி மக்கள் கழிவறை வசதி இன்றி இருக்கின்றனர்.
இந்தியாவை பொறுத்தவரை கிராமப்புறங்களிலேயே இந்த அளவு அதிகமாக உள்ளது நகர்புறங்களில் 18% பேருக்கும், கிராமப்புறங்களில் 69% பேருக்கு ம் கழிவறை வசதி இல்லை. இந்தியாவில் 81% பேருக்கு வீடு வசதி கிடைத்துள்ள போதும், கழிவறை வசதி இல்லாமல் உள்ளது. கழிவறை வசதி இல்லாததே இந்தியாவில் வயிற்று போக்கு உள்ளிட்ட தொற்று நோய் அதிகம் பரவ காரணமாக அமைந்துள்ளது. இந்த நோய்களால் சம்பந்தப்பட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டு இருக்கின்றனர்.
இவ்வாறு ஐ.நா.,வின் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இந்த செய்தியை படித்ததும் எனக்கு கோபமும், ஆத்திரமும் வந்தது. பாரத தேசத்தையும், நமது வாழ்க்கைமுறையையும் மேலை நாட்டுக்காரர்களால் கொஞ்சமும் புரிந்து கொள்ள முடிய வில்லையே.
இதனை படித்த போது எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் நிழலாடின.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உறவினர்கள் சிலர் திருச்சியில் இருந்து மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். அந்த பயணம் காலை 8 மணியளவில் இருக்கும். அப்போது அதில் ஒருவர் தனக்கு உடனடியாக மலம் கழிக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு மற்றொருவர் எனக்கும் அந்த உபாதை உள்ளது. ஆனால் அதற்கு தகுந்த இடம் இல்லையே, இப்போது தான் விராலிமலை பகுதியில் உள்ளோம். மதுரை சென்றடைய சுமார் ஒன்றறை மணிநேரம் ஆகும். அதுவரை பொறுத்து இருக்குமாறு கூறினார். தாமும் அவ்வாறே பொறுத்து இருப்பதாக தெரிவித்தார். அதற்கு அவரோ கழிவறையில் தான் மலம் கழிக்க வேண்டும் என்று யார்? கூறினார். தண்ணீர் உள்ள இடம் ஏதாவது தெரிந்தால் அங்கு காரை நிறுத்துமாறு கூறினார். அதன்படி வழியிலேயே ஒரு தோ ட்டம் போன்ற ஒரு இடத்தில் கார் நிறுத்தப்பட்டது. தேவைபட்டவர்களின் உபாதை தீர்ந்தது.
பின்னர் எங்கள் பயணம் தொடர்ந்தது. அப்போது எங்களுக்குள் விவாதம் நடைபெற்றது. படித்த நாமே இப்படி பொது இடத்தில் மலம் கழிக்கலாமா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. ஆனால் அப்போது ஒருவர் பொது கழிவறையில் மலம் கழிப்பதை விட இதுபோன்ற தோட்டங்களில், வயல்வெளிகளில் மலம் கழிப்பது பல மடங்கு நல்லது என்றார்.
இப்படி பொது இடத்தில் மலம் கழிப்பதால் நோய்கள் பரவாதா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் எங்கள் உறவினர் கூறினார். காலம் காலமாகவே நாம் இதுபோன்ற இடங்களை தான் கழிவறையாக பயன்படுத்துகிறோம். ஏனென்றால் இவை தான் சுகாதாரமானவை. இங்கு கழிக்கப்படும் கழிவுகள் அனைத்தும் அன்றறைக்கு சூரியனால் உரமாக்கப்பட்டு விடுகிறது. இதனால் நோய் பரவாதது மட்டுமல்ல அந்த நிலத்திற்கு உரமாகவும் பயன்பட்டு விடுகிறது. என்றார்.
மேலும் கூறும்போது, டைவர்சிபைடு லைப் என்று ஆங்கில வார்த்தை ஒன்று. இது நமது இந்தியாவுக்கு தான் பொருந்தும். ஏனென்றால் எதையுமே ஆங்காங்கு பிரித்து செய்வது. இதனால் பாதிப்பு குறைவு மட்டுமல்லாது. அனைவரும் சேர்ந்து சுமக்கும் அவலமும் இருக்காது . எடுத்துக்காட்டாக மனித மலத்தை கூறலாம் அதனை அகற்றுவது இன்று நகர்புறங்களில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதற்காக மனிதர்கள் மற்றும் இயந்திரங்களின் பெரும் உழைப்பு தேவைப்படுகிறது. ஆனால் கிராமங்களில் அதுபோன்ற எந்த தேவையும் இருப்பதில்லை. அந்த கழிவு பொருட்களால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. எந்த சிரமும் இன்றி யாருக்கும் பாதிப்பு இன்றி கழிவு பொருட்கள் உரமாக்கப்படுகின்றன,’ என்று கூறினார்.
நல்ல சிந்தனை என்று எங்கள் அனைவருக்கும் தோன்றியது.
ஐ.நாவின் ஆய்வு செய்தியை படித்த போது எனக்கு இந்த எண்ணம் தான் தோன்றியது.
வீடு எப்படி க ட்ட வேண்டும்? அதில் ஒவ்வொரு அறையும் எப்படி அமைய வேண்டும்? வசதிகள் எப்படி இருக்க வேண்டும் என்றால் உலகிற்கே வழிகாட்டியவர்கள் நாமல்லவா?
இந்திய கிராமங்களில் காலம் காலமாக கழிவறை என்பது வயல்வெளியும், தோட்டமும் தான். அங்கு மனித கழிவுகள் சூரியானால் உரமாக்கப்பட்டு விடுகிறது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
இப்போதோ நகரங்களில் சேரும் பெரும் மனித கழிவை எப்படி அகற்றுவது என்பது இன்று பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது. கழிவு பொருட்களை அகற்றுவது எப்படி என்பது தெரியாமல் அமெரிக்ககா முழிக்கிறது. அனைத்து மேலைநாடுகளையும் இன்று அச்சுறுத்தும் விஷயம் இது தான். சாதாரண மனித கழிவுகள் முதல் ரசாயன கழிவுகள் வரை இன்று மனிதகுலத்தையே பயமுறுத்தி வருகிறது.
ஆனால் நமது நாட்டில் எதுவுமே கழிவு இல்லை. எந்த ஒன்றும் மீண்டும் மறுசுழற்சியாக பயன்படுத்திக் கொள்வது நமக்கு காலம் காலமாக பழக்கம் தான். நமது சிந்தனை முறையே அப்படி தான். இன்றும் எத்தனையோ கிராமங்களில் வயல்வெளிகளும், தோட்டங்களும் தான் கழிவறைகளாக உள்ளன.
ஆனால் பெரிய அளவில் நோய் பாதிப்போ! தொற்று வியாதிகளோ பரவுவதாக தெரிய வில்லை. இன்றும் கிராமங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவுமே இருக்கின்றன. எந்த ஒரு தொற்று நோயும் கிராமங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை விடவும் நகர்புறங்களில் ஏற்படுத்தும் பாதிப்பே அதிகம்.
ஐ.நா தெரிவித்துள்ள தகவலில் ஒரு வேடிக்கையும் உள்ளது. அதில், இந்தியாவில் 81 சதவிகிதம் பேருக்கு குடியிருக்க வீடு உள்ள போதிலும் அதில் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழிவறையை வீட்டிற்குள் கட்டுவது என்பது இன்றைய நவீன சிந்தனை தானே! நகர்புறங்களில் இதற்கெல்லாம் வசதி இல்லாததால் வீட்டிற்குள்ளேயே, ஏன் ஒரே அறைக்குள்ளாகவே கழிவறையை ஏற்படுத்திக் கொள்கிறோம். ஆனால் கிராமத்து இந்தியர்கள் முடிந்த வீட்டிற்கு வெளியே கழிவறையை வைக்கின்றனர். பெரும்பாலும் திறந்தவெளியையே கழிவறையாக பயன்படுத்துகின்றனர்.
கிராமங்களில், தண்ணீர் கூட பிரித்து தான் பயன்படுத்த படுகிறது. டிநீருக்கான குளமோ, கிணறோ மற்ற பயன்பாட்டிற்கு பயன்படுத்தபடுவதில்லை. மீன் வளர்க்க குளம், துணி வைக்க குளம், குடிநீர் குளம் என அனைத்தையும் தனிதனியாக பயன்படுத்தும் பழக்கம் கிரா மத்து இந்தியர்களிடம் தான் உள்ளத.
ஆனால் கிராமத்து இந்தியர்களிடம் சுகாதாரம் இல்லை என்று மேலை நாட்டினர் கூறிகின்றனர்.
என்ன விந்தை இது!
--------------------------------
செய்தி-1
பிப்ரவரி- 2010
அண்மையில் ஒரு செய்தியை படித்தேன். அதில் தமிழகத்தில் மக்கள் தொகை பெருக்கத்தின் அளவு கணிசமாக குறைந்து வருவது தெரிய வந்துள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தின் அளவு நாட்டிலேயே குறைந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது. அடுத்த 15 ஆண்டுகளில் இதன் அளவு மேலும் அதிகரிக்கும் என்று அந்த செய்தி கூறுகிறது.
அதன் விவரம்:
மற்றபல நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் அடுத்த 15 ஆண்டுகளுக்கு பிறகு இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாகவே இருக்கும். இருப்பினும் தற்போதுள்ள சதவிகிதத்தை விட இது குறைவாகவே இருக்கும். வட மாநிலங்களில் இன்னும் மக்கள் தொகை பெருக்கமும், இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. இருப்பினும் இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நிலைமை மா றி வருகிறது.
தென்மாநிலங்கள் வழக்கம் போல் மக்கள் தொகை பெருக்கத்தில் குறைவான மாநிலங்களாகவே இருந்து வருகிறது. வரும் காலங்களிலும் இது தொடரும். இந்தியாவில் சராசரி மக்கள் தொகை பெருக்கம் அடுத்த 15 ஆண்டுகளில் 36% ஆக இருக்கும். ஆனால் இந்த சராசரியை விடவும் பல மாநிலங்கள் முன்னணி வகிக்கின்றன. மக்கள் தொகை பெருக்கத்தில் முதல் மாநிலமாக டெல்லி விளங்கும்.
அங்கு மக்கள் தொகை பெருக்கம் 102% ஆக இருக்கும். இதற்கு அடுத்த படியாக அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஆகிய மாநிலங்களில் மக்கள் தொகை பெருக்கம் 50% ஆக இருக்கும். இமாச்சல பிரதேசம், பஞ்சாப், மேற்குவங்கம், ஒரிசா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, ஆகிய மாநிலங்களில் 20% முதல் 30% மட்டுமே மக்கள் தொகை பெருக்கம் இருக்கும். மக்கள் தொகை பெருக்கம் மிகவும் குறைவான மாநிலமாக தமிழகம் இருக்கும். இளைஞர்கள் அதிகம்கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் தொடர்நது நீடிக்கும்.
வயதானவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக கேரளா இருக்கும். அம்மாநிலத்தில் ஆறு பேரில் ஒருவர் 60 வயதிற்கு அதிகம் கொண்ட வயதானவர்களாகவே இருப்பார்கள். அதுமட்டுமின்றி கேரளாவில் நடுத்தர வயது கொண்டவர்கள் எண்ணிக்கையும் 38% ஆக இருக்கும்.
இப்படி விவரிக்கிறது அந்த செய்தி...
சரி..... இளைய சமுதாயம் அதிகம் வசிக்கும் நாடு என்று நாம் பெருமை பட்டுகக்கொண்டிருக்கிறோம். நமது வலிமையே இளைஞர்கள் தான்.. நிலைமை இப்படியே போய் கொண்டு இருந்தால் மற்ற பல நாடுகளை போல நாமும் வயதான நாடாக உருவாகி விடுவோமோ?
ஒரு நாடானும் சரி, மாநிலமானாலும் சரி மக்கள் தொகை தான் உண்மையான செல்வம். மக்கள் தொகை எண்ணிககை தான் பல விஷயங்களை தீர்மானிக்கிறது. ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல. பொருளாதாரம், பல்வேறு துறை சார்ந்த பணிகள், நாட்டின் பாதுகாப்பு இப்படி எந்த ஒரு பிரச்னை என்றாலும் அதற்கு நமது பெரிய மக்கள் தொகையே தீர்வாக இருந்தது.
தமிழகத்தில் மக்கள் தொகை குறைவது சரியானதா? தேசத்ததிற்கு மட்டுமல்லாமல் உலகத்திற்கும் தமிழ் சமூகம் அளிக்க வேண்டிய பங்களிப்பு என்னாகும்? நாம் தான் யோசிக்க வேண்டும். ...
--------------------------------
No comments:
Post a Comment