இந்திய அரசின் பொருளாதாரத்தை வைத்து மட்டும் நமது நாடு வளர்ந்து வரும் நாடு என்று கூறலாம். ஆனால் நமது மக்களின் செல்வத்தை வைத்து பார்த்தால் உலகிலேயே பணக்காரர்களை கொண்ட நாடு நமது நாடு தான்!இந்தியாவில் உள்ள வசதி படைத்தவர்களில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு நாட்டின் தேசிய வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன..
கடந்த 2008ம் ஆண்டு பொருளாதார மந்தநிலை உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த போதிலும் இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏறபடுத்த வில்லை. கடந்த 2008ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தும் மந்தநிலையால் தவித்த போதும் இந்தியாவுக்கு அந்த பாதிப்பு ஏற்பட வில்லை. உலக வல்லரசு என தம்பட்டம் அடிக்கும் அமெரிக்காவே ஆடிபோனது. ஆனால் அந்த புயலை எளிதாக எதிர்கொண்டு தன்னை நிலை நிறுத்திக் கொண்டது இந்தியா.
நமது நாட்டின் இந்த உறுதிக்கு அரசு கொஞ்சமும் காரணமல்ல. மாறாக மக்கள் தான். மக்களின் மண், பண்பாடு சார்ந்த பொருளாதாரமும், வலுவான அடிப்படையும், வரவுக்குள் செலவு செய்யும் மனப்பான்மையும், இவை எல்லாவற்றையும் விட சேமிப்பு மனப்பான்மையும் தான் இந்தியாவை பொருளாதார மந்தநிலையில் இருந்து காப்பாற்றியது. இப்போதும் கரை சேர்த்துக் கொண்டு இருக்கிறது.
கடந்த 2008ம் ஆண்டு உலகம் முழுவதுமம் மந்தநிலையால் பாதிப்பு இருந்ததால் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கூட குறைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் பெரும் பணம் படைத்தவர்களாக வளம் வந்தவர்களின் சொத்து மதிப்பு பெருமளவு சரிந்து போனது. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டும் மந்தநிலையால் பாதிப்பு ஏற்பட வில்லை. மாறாக மந்தநிலை நிலவிய 2008ம் ஆண்டில் இந்தியர்களின் சொத்து மதிப்பு முந்தைய ஆண்டை விட 50% அதிகரித்துள்ளது.
ஒரு லட்சத்து 20 ஆயிரம் இந்தியர்களின் சொத்து மதிப்பு அந்நாட்டின் தேசிய வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காகும். அதாவது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில்0.01% மட்டுமே உள்ள மக்களின் சொத்து மதிப்பு தேசிய வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காக உள்ளது. இதன் மொத்த மதிப்பு 15 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாகும். ஒரு லட்சத்து 20ஆயிரம் இந்தியர்களில் ஒரு இந்தியரின் சராசரி சொத்து மதிப்பு 16.5 கோடி ரூபாயாகும்.
பொருளாதார மந்தநிலை உட்பட எந்த ஒரு பொருளாதார சுனாமியிலும் சிக்காமல் இந்தியர்களின் பொருளாதாரம் வளர்ந்து வருவதை ஐ.நா.,வின் சமீபத்திய அறிக்கையே சாட்சி. அந்த அறிக்கை கீழ்கண்டவாறு கூறுகிறது
இந்தியர்களை பொறுத்தவரை சொத்து சேர்க்கும் அளவிற்கு செலவு செய்வதில்லை, ஒட்டுமொத்தமாக சேர்க்கும் பணத்தில் குறிப்பிட்ட அளவு மட்டுமே அவர்கள் செலவு செய்கின்றனர். பல நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியர்களின் செலவு செய்யும் அளவு மிகக்குறைவாக உள்ளது. இந்தியர்கள் சொத்து சேர்ப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர்.
இதனால் அவர்கள் வசம் உள்ள சொத்தை கொண்டு பல ஆண்டுகளுக்கு அவர்களுக்கு தேவையான உணவு தேவையை ஈடு செய்ய முடியும். நகர்புற இந்தியர்களிடம் சற்று செலவு செய்யும் போக்கு காணப்படுகிறது. சராசரியாக நகர்புற இந்தியர் சேர்த்து வைத்துள் சொத்து மதிப்பை கொண்டு அவர் 2 ஆயிரத்து 238 ஆண்டுகளுக்கு தனது உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். அதேசமயம் கிராமப்பு இந்தியர் வைத்திருக்கும் சொத்தை கொண்டு அவர் 3 ஆயிரத்து 814 ஆண்டுகள் தனது உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
இவ்வாறு ஆச்சரியத்துடன் கூறுகிறது ஐ.நா அறிக்கை.
இதுமட்டுமின்றி வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்க்கையும் ஆச்சரியமாக இருப்பதாக ஐ.நா கூறுகிறது. இந்தியாவில் வறுமையில் வாடும் மக்கள் கோடி கணக்கில் இருக்கின்றனர் சுமார் ஒரு கோடியே 36 லட்சம் இந்தியர்கள் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். அவர்கள் ஒரு வேளை உணவுக்கு கூட கஷ்டப்படுகின்றனர். சரியான உணவு, கூட இல்லாமல் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.
ஆனாலும் கூட அவர்களில் பலருக்கு சொந்த வீடு உள்ளது. குடிசையாக இருந்தாலும் சொந்த வீடும், ஏதோ கொஞ்சம் நிலமும் உள்ளது. செலவு செய்ய பணம் இல்லா விட்டாலும் கூட சொத்து இருக்கிறது. தங்களின் சொத்தை விற்று செலவு செய்ய அவர்கள் விரும்புதில்லை. சொத்தை சேமிப்பாகவே கருதுகின்றனர். சொத்தை பரம்பரை பரம்பரையாக அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்கின்றனர். இந்த சொத்து வாழையடி வாழையாக தொடர்கிறது என ஐ,நா ஆச்சரியம் தெரிவிக்கிறது.
உண்மை தான் கிராமப்புறத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் இந்தியனும் கூட சொத்து வைத்திருப்பதால் ஏழை இல்லை. மேலை நாட்டினரோ செலவு செய்ய பல லட்சம் சம்பாதித்த போதும்கூட மிஞ்சி இருப்பது கடன் தான் என்பதால் அவர்கள் ஏழைகள் தான். நுகர்வு கலாச்சாரத்தில் சிக்காததால் இந்தியர்கள் வலுவுடனேயே இரு க்கின்றனர். நமது பொருளாதார பலத்திற்கு காரணம் இது தான். ஒரு மந்தநிலை மட்டுமின்றி எத்தனை மந்தநிலை வந்தாலும் இந்தியர்களின் பொருளாதாரத்தை அசைக்க முடியாது. எனவே தான் நாடு வேண்டுமானால் ஏழையாக இருக்கலாம். ஆனால் மக்கள் பணக்கார்கள் தான்!
Wednesday, June 30, 2010
ஆட்டிப்படைக்கும் நுகர்வு கலாச்சாரம்! அலறுகிறது அமெரிக்கா!
உலகிலேயே வசதிபடைத்த நாடு எது என்று கேள்வி பள்ளி மாணவர்களிடம் கேள்வி கேட்டாலும் அது அமெரிக்கா என்ற பதில் உடனே வரும். ஆனால் அது வெறும் வெளித்தோற்றத்தில் மட்டுமே! பொருளாதார ரீதியாக பார்த்தால் அது வெறும் ஏமாற்று வேலை. உண்மையில் பணக்காரர்கள் இந்தியர்கள் தான்! இதனை கேட்டால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் உண்மை இது தான்
அமெரிக்காவை பொறுத்தவரை நாடு தான் பணக்கார நாடு. ஆனால் மக்களோ ஓட்டாண்டி மக்கள். வரும் வருமானத்தை விடவும் கூடுதலாக கையிருப்பும், முதலீடும் கொண்ட நாடு அமெரிக்கா. எனினும் அந்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் கடனாளிகள் தான். ஒவ்வொருவரும் செலவுக்காக பல ஆயிரம் ரூபாயை கடன் பெற்றுள்ளவர்கள். இந்த கடனை கட்ட முடியாமல் நிற்பவர்கள். அவர்களது கடன் சுமையால் தான் பொருளாதார மந்தநிலை என்ற பூதமே உலகை பதம் பார்த்தது.
பொருளாதார மந்தநிலையால் கடந்த 2008ம் ஆண்டு அனைத்த நாடுகளுக்கும் போதாத காலமாகவே அமைந்தது. அமெரிக்காவின் லேமென் பிரதர்ஸ் வங்கி திவாலானதை தொடர்ந்து அந்நாட்டில் 250க்கும் மேற்பட்ட வங்கிகள் திவாலாகின. ஜவுளி, தோல், சுற்றுலா, தகவல்தொழில்நுட்பம்,ஆட்டோமொபைல் நிதி சேவை, உள்கட்டமைப்பு என அனைத்து துறைகளுமே பாதிக்கப்பட்டன. ஏற்றுமதி குறைந்ததால் உற்பத்தி வீழ்ச்சியடைந்து பாதிப்பு ஏற்பட்டது.
பல்வேறு நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் பொருளாதார மந்தநிலையின் பாதிப்புகள் தற்போது விலகி வருகிறது. இருந்தாலும், அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலையின் பாதிப்பு தொடர்கிறது. நிதிசேவை நிறுவனங்கள் தொடங்கி, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வரை அனைத்தும் முழுமையாக பாதிப்பில் இருந்து விலக வில்லை. ஒரளவு ஆர்டர்கள் கிடைத்து வருகின்ற போதிலும், உற்பத்தி சீரடைய வில்லை. உற்பத்தி, முதலீடு, வளர்ச்சி, ஏற்றுமதி என அனைத்து துறைகளிலும் இன்னமும் பாதிப்பு தொடர்கிறது.
பொருளாதார பாதிப்பால் அமெரிக்காவில் தான் அதிகம் பேர் வேலையிழந்தனர். பல முன்னணி நிறுவனங்கள் திவாலானதாலும், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்தனர். பல மாதங்களாக வேலையில்லாமல் திண்ணாடி வருகின்றனர். வேலையில் இருப்பவர்களின் சம்பளம் கூட கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. வேலையில்லாத பல அமெரிக்கர்கள் மனநோயாளிகளாக மாறி வருகின்றனர். இதற்கு அடிப்படை காரணம் அமெரிக்கர்களின் நுகர்வு கலாச்சாரம் தான்.
அமெரிக்கர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அதனை முழுமையாக செலவு செய்பவர்கள். வருமானத்தை மீறி கடன் வாங்கியும் செலவு செய்பவர்கள். உதாரணத்திற்கு ஒரு அமெரிக்கர் மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் கூட அவர்கள் ஒன்றை லட்சம் ரூபாய் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்கின்றனர். விளைவு மாதம் தோறும் கடனம் சுமை மட்டும் கூடிக் கொண்டே செல்கிறது.
நுகர்வு கலாச்சாரம் அதிகரித்து பொருட்கள் அதிகம் விற்பனையாகி பொருளாதாரம் பெருகும் என கருதி அந்நாட்டு அரசே இதனை ஊக்குவித்தது. அமெரிக்கர்கள் அதிகம் செலவாளியாக இருந்தால் பொருளாதாரம் உயரும் என்பது அமெரிக்காவின் அசைக்க முடியாத நம்பிக்கை. இது ஒரு விதத்தில் உண்மை என்பதால் தான் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த நுகர்வு கலாச்சாரம் காரணமாக இருக்கிறது.
அதாவது மக்களை கடனாளியாக்கி தனது பொருளாதாரத்தை வளமாக்குகிறது அமெரிக்கா. ஆனால் இது தவறான கருத்து என்பதை அமெரிக்கா காலம் கடந்து உணர்ந்து வருகிறது. பொருளாதார மந்தநிலையின் பாதிப்புக்கு பிறகு இந்த உண்மையை சரியாக புரிந்து கொண்டு விட்டது அமெரிக்கா. இந்த நுகர்வு கலாச்சாரம்! நீண்ட காலத்திற்கு மக்களை மட்டுமின்றி தங்கள் தேசத்தையும், ஏன் நம்பியிருக்கும் மற்ற நாடுகளையும் படு குழியில் தள்ளி விடும் என்பததை அமெரிக்கா உ<ண்ர்ந்து விட்டது. மக்கள் வீழ்ந்து! நாடு நன்றாக இருந்தால் பயனல்ல என்பது அமெரிக்காவுக்கு உரைத்து விட்டது.
இப்போதோ தனது குடிமக்களை, செலவை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறுகிறது அமெரிக்கா. இருப்பினும் செலவு செய்தே பழக்கப்பட்டு விட்ட அமெரிக்கர்களுக்கு செலவை குறைத்துக் கொள்வது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல. பழக்கத்தை உடனடியாக மாற்றிக் கொள்ள முடியாது அல்லவா! அமெரிக்க மக்கள் மாற இன்னும் காலம் பிடிக்கத்தான் செய்யும்!

சனிக்கிரகத்தில் கச்சா எண்ணெய்?
சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் குறித்து தற்போது ஆராய்ச்சிகள் பெரிய அளவில் நடைபெற்று வருகிறன. அமெரிக்கா மட்டுமின்றி ஜப்பான், பிரான்ஸ், சீனா, தென்கொரியா என பல நாடுகளும் இந்த ஆராய்ச்சியில் தற்போது தீவிரம் காட்டி வருகின்றன.
ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இந்தியர்கள் வானசாஸ்திரத்திலும், விண்வெளி ஆராய்ச்சியிலும் பெரும் சாதனைகள் கண்டுள்ளனர். பாஸ்கராச்சாரியரின் காலம் முதல் கடந்த நூற்றாண்டு வரை விண்வெளி ஆய்வில் நாம் செய்துள்ள சாதனைகள் மகத்தானவை. இப்போது மேலை நாடுகள் மேற்கொண்டுள்ள ஆய்வுகள் அனைத்துமே நம் ஏற்கனவே ஆய்வு செய்து கூறியுள்ளதை உறுதி செய்வதாகவே அமைகின்றன.
சூரிய மண்டலத்தில் பூமியை தவிர பல்வேறு கோள்களின் நி லைபாடுகளையும், அதன் தன்மையையும் குறித்து பல்வேறு ஆய்வகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக செய்வாய் கிரகம் குறித்தும், சந்திரன் குறித்தும் அதிகபடியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா இதுகுறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன.
பூமியை தவிர வேறு எந்த கிரகமும் மனிதன் வாழ தகுதியான வகையில் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் செவ்வாய் கிரகத்திலும், சந்திரனிலும் தண்ணீர் இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் இருப்பதால் அங்கு உயிரினங்கள் வாழ தகுதி இருக்கிறதா என ஆய்வு நடைபெற்று வருகிறது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம சந்திரா யன் விண்கலத்தை அனுப்பி நடத்திய ஆய்விலும் சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு பாறைகள் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே அடுத்தகட்டமாக அங்குள்ள தண்ணீர் குறித்து ஆய்வுளை நாசா விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்
இதுபோலவே செவ்வாய் மற்றும் சந்திரன் தவிர வேறு சில கிரகங்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,.சனிக்கிரகத்தில் ரசாயனப் பொருட்கள் இருப்பதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கூறியுள்ளது. குறிப்பாக அந்த ரசாயனப் பொருள் கச்சா எண்ணெய் போல் இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
இந்த ரசாயனப் பொருட்கள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பது இன்னுமும் தெரிய வில்லை. அதேசமயம் இவற்றின் சில தன்மைகள் கச்சா எண்ணெயை ஒத்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனினும் முழு அளவிலான ஆய்வுக்கு பிறகே இதுகுறித்து எதுவும் கூற முடியும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சனிக்கிரகம் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று நாசா அறிவித்துள்ளது.
இதுபோலவே செவ்வாய் கிரகத்தில் இயற்கையான மீத்தேன் இருப்பதாக கனடா ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இயற்கையாக உருவாகும் இந்த மீதேன் பாக்ட்ரீயாக்களில் இருந்து வெளிபடுகிறது. செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிரிகள் இருப்பது தெரிகிறது. எனவே செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்துள்ளது. தண்ணீர் இருப்பது ஏற்கனவே உறுதியாகியுள்ள நிலையில், உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்த ஆய்வுகள் எல்லாம் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று கொண்டு இருந்தாலும் மற்ற கிரகத்தில் மனிதன் வாழ சாத்திய கூறுகள் இருப்பதாக மட்டுமே கூறப்படுகிறது. ஆனால் பூமி பந்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் மனிதன் வாழ மாற்று கிரகம் எப்போது கிடைக்கும் என்பது மட்டும் விடை தெரியாத பதிலாகவே உள்ளது.

பன்றிக்காய்ச்சல் பீதி! இதிலும் ஆதிக்க மனப்பான்மை
பன்றிக்காய்ச்சல் பீதி
இதிலும் ஆதிக்க மனப்பான்மை
உலக மக்கள் தொகையில் குறிப்பிட்ட அளவு கூட இல்லாத அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எந்த ஒரு பிரச்னை என்றாலும் உலகத்திற்கே வழிகாட்டியாக காட்டிக் கொண்டு பெரியண்ணன் வேலையில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று. ராணுவ மற்றும் பொருளாதார பலத்தால் முந்திச்செல்லும் இந்த நாடுகளின் உரித்தெடுத்த சுயநலம் பிரபலமானது. ஆங்கிலேயன் நம்மை ஆண்ட காலம் தொட்டு இன்று வரையிலும் ஐரோப்பிய இனத்திற்கு உள்ள இந்த உயர்வு மனப்பான்மை உலகத்தையே பாடாய் தான் படுத்துகிறது.
சமீபத்தில் செய்தி ஒன்றை படித்தேன். மேலே கூறியவற்றை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது அந்த செய்தி. பன்றிக்காய்ச்சல் கடந்த ஒராண்டாக உலகம் முழுவதும் படாத பாடு படுத்திய நிலையில் அது தொடர்பாக ஏற்படுத்திய பீதி என்பது மிகவும் அதிகம் தான்.
முதலில் பாதிப்பை ஏற்படுத்தியது அமெரிக்காவில் என்பதாலும், போவது அமெரிக்க உயிர் என்பதாலும் அதற்கு மவுசு தானே! பன்றிக்காய்ச்சலை பொருத்தவரை பெரும் பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவில் அந்த நாட்டில் சுமார் 2 லட்சத்து 65 ஆயிரம் பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். 12 ஆயிரம் பேர் பலியாயினர். 36 ஆயிரம் பேருக்கு சாதாரண அளவிலேயே பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதுபோலவே பிரிட்டனில் பன்றிக்காய்ச்சலால் 65 ஆயிரம் பேர் இறந்து விட்டதாக தகவல்கள் பரப்பப்பட்டன.
ஆனால் உண்மையில் அந்த நாட்டில் 360 பேர் மட்டுமே பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகினர் ஆனால் மேலை நாட்டினர் உயிர் என்பதால் பன்றிக்காய்ச்சல் தொடர்பாக அளவுக்கு மீறிய பீதியை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஏற்படுத்தின. பன்றிக்காய்ச்சல் மட்டுமின்றி நோய் பரப்பும் எந்த ஒரு கிருமிகளும் ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் இருந்து தான் பரவுவதாக அந்நாடுகள் ஆவேசப்பட்டன.
ஆசிய, ஆப்ரிக்க நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என தங்கள் குடி மக்களை கேட்டுக் கொண்டன. இதில் மேலை நாட்டினரின் ஆதிக்கம் நிறைந்த உலக சுகாதார அமைப்பும் இந்த பீதியை பெரிதாக ஊதியது. பாதிக்கப்படுவது மேலை நாட்டினர் என்பதால் பெரும் பீதியை ஏற்படுத்தி உலகம் முழுவதும் வசூல் செய்தது. பன்றிக்காய்ச்சல் நோய் ஒழிப்புக்காக பல கோடி ரூபாய் திரட்டப்பட்டு மேலை நாடுகளில் அவை பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உலக சுகாதார அமைப்பின் பீதி காரணமாக பல நாடுகளும் பன்றிக்காய்ச்சலுக்காக தேவையற்ற முறையில் பல ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்தன. பாதிப்பு இருந்ததை விடவும் பல மடங்கு அதிகமாக பணமும், முக்கியத்துவமும் தரப்பட்டு விட்டது.
ஆனால் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பு இரண்டாவது சீசனில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அதிகம் இருந்தது. பன்றிக்காய்ச்சலுக்கு இந்தியாவிலும் கூட நூற்றுக்கணக்கானோர் பலியாயினர். இதன் தொடர்ச்சியாக இப்போதும் கூட பன்றிக்காய்ச்சலின் பாதிப்பு தெரியத் தொடங்கியுள்ளது. ஆனால் ஐரோப்பிய நாடுகள் இப்போது என்ன சொல்கிறது தெரியுமா?
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் பரவிய போது உலக சுகாதார அமைப்பு அளவுக்கு அதிகமாக பீதியை ஏற்படுத்தி இதற்காக தேவையற்ற முறையில் பல கோடி ரூபாயை செலவழிக்கச் செய்து விட்டதாக கூறியுள்ளன. பன்றிக்காய்ச்சல் என்றால் பீதி கொள்ள வேண்டாம் என்கிறது ஐரோப்பிய யூனியன். இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு, உலக நாடுகளிடையே அளவுக்கு அதிகமான பீதியை ஏற்படுத்தி விட்டதாக ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு கவுன்சில் கூறியுள்ளது.
பன்றிக்காய்ச்சல் பீதியால் தொழில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாகவும், பல நாடுகளில் தொழில் செய்பவர்கள் பயணம் மேற்கொள்ளாததால் இழப்பை சந்தித்துள்ளதாகவும் ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் கூறியுள்ளன. ஏனென்றால் இப்போது போவது ஆசிய மக்களின் உயிர் தானே! இதிலும் ஆதிக்க மனப்பான்மை தான் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு!

அளவுக்கு மிஞ்சினால் அறிவியலும் ஆபத்து தான்!
விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது விவரிக்க முடியாத புரட்சி! அறிவியலின் துணை கொண்டு கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மனிதன் நடத்தி வரும் சாதனைகள் சாதாரணமானவையல்ல. ஒவ்வொன்றும் காலத்தால் அழியாத பதிவுகளாக மாறி வருகின்றன. ஒவ்வொரு புதிய புதிய கருவிகளை கண்டு பிடிக்கும் போதும், அதனை பயன்படுத்தும் போதும் கிடைக்கும் வசதியும், வாய்ப்பும், புதியஅனுபவமும் மனிதனை புதிய யுகத்திற்கு அழைத்துச் சென்று கொண்டு இருக்கிறது.
இதுபோலவே அறிவியல் வளர்ச்சியின் அற்புதமான கண்டுபிடிப்பான தொலைபேசியின் புதிய அவதாரம் செல்போன்களாகும். கடந்த 10 ஆண்டுகளில் தகவல் தொடர்பு துறையில் புதிய சரித்திரம் படைத்துள்ளது செல்போன்கள். இந்தியாவில் செல்போன்கள் பயன்பாட்டிற்கு வந்த போது, முதலில் அது வசதி படைத்தவர்களின் சாதனமாகவே இருந்து வந்தது. ஆனால் அதன் பயன்பாட்டின் சிறப்பை மனிதன் உணரத் தொடங்கியதும், செல்போனுக்கான செலவு குறைந்து வருவதும் அதன் மீதான மனிதனின் ஈர்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
செல்போன் இல்லாமல் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாது என்ற அளவிற்கு இன்று நிலைமை மாறியுள்ளது. உடன் யாராவது இருக்கிறார்களாக இல்லையா என்பதை விட செல்போன் இருப்பது அவசியமாகி போனது. கழிவறைக்கு கூட செல்போனுடன் செல்பவர்கள் இன்று அதிகம். செல்போன்கள் தற்போது பலருக்கு உடலுடன் ஒன்றிப்போன உறுப்பாகவே மாறி விட்டது. இதனால் தான் செல்போன்கள் பயன்படுத்துபவர்களின்
எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் தற்போது சுமார் 35 கோடி பேர் செல்போன்களை பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் செல்போன்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நம்நாட்டில் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. அதுபோலவே செல்போன் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செல்போன் தொழிலில் கொழிக்கும் பணத்தால் இதில் பல தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஈடுபட்டு வருகின்றன. இதனால் குக்கிராமங்களில் கூட செல்போன் டவர்கள், செல்போன் பயன்படுத்த தேவைப்படும் கருவிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மொத்ததில் எங்கு காணினும் செல்போனடா என்ற நிலை தான் காணப்படுகிறது.
எனினும் எந்த ஒரு தொழில்நுட்பத்திலும், வசதி எந்தஅளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு பாதிப்பும் இருக்கவே செய்கிறது. அந்தவகையில் செல்போன்கள் மனித குலத்தை அச்சுறுத்தும் பொருளாகவும் இன்று செல்போன்கள் உருவெடுத்து வருகின்றன.
செல்போன்களில் இருந்து வெளிப்படும் ஒலி அலைகள், கதிர் வீச்சும் மனிதர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. செல்போன்களால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளில் செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு ஒலி அலைகளால் பெருமளவு பாதிப்பு ஏற்படுவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஒலி அலைகள் நேரடியாக மூளையை தாக்குவதால் அதன் செயல்பாடுகளும், வளர்ச்சியும் முடங்கிப்போவதாக கூறப்படுகிறது.
எனவே செல்போன் மூலம் பேசுவதை கூடிய அளவில் குறைத்துக் கொள்வது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். குழந்தைகளுக்கு செல்போன்களை பழக்குவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர். கருவுற்ற பெண்கள் செல்போன்களை பயன்படுத்துவதால் அவர்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
செல்போன்களில் இருந்து வெளி வரும் ஒலி அலைகள் நேரடியாக மூளையைச் சென்று தாக்கவல்லது. அதுமட்டுமின்றி அந்த ஒலி அலைகள் கருவுற்றிக்கும் குழந்தைகளையும் பாதிப்படை செய்யும். குழந்தையின் வளர்ச்சி, அதன் மன அமைதி போன்றவை பாதிக்க வாய்ப்பு உள்ளது. செல்போன்களில் இருந்து வரும் கதிர்களால் மூளையில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மூளையின் செயல்திறன் குறைவதால் மன வளர்ச்சி கூட பாதிக்கும் அபாயம் உள்ளது. அதுமட்டுமன்றி சிந்திக்கும் திறனும் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
செல்போன் டவர்களால் மனிதர்களுக்கு பெரும் கதிரியக்க பாதிப்புகள் ஏற்படுகின்றன. அந்த டவர்களை சுற்றியுள்ள சில கிலோ மீட்டர் தொலைவுக்கும் கூட கதிர்களின் வீச்சு உள்ளது. இதனால் தான் நகர்புறங்களில் குருவிகள் இனமே அழிந்து விட்டது. குருவிகள் மட்டுமின்றி வேறு சில பறவை இனங்களும் செல்போன் டவர்களால் அழிந்து வருகின்றன.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் சமீபத்திய நடத்திய ஆய்வில் செல்போன்களால் டி.என்.ஏ பாதிப்பு ஏற்படுவதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. செல்போன் கதிர் வீச்சை எலிகள் மீது செலுத்தி ஆய்வு செய்த போது அவற்றின் மரபணுக்கள் சிதைந்து வருவது உறுதியாகியுள்ளது. மரபணுக்கள் சிதைவதால் பல நோய்கள் வருவதுடன், மனித குலத்தின் பண்புகள், செயல்பாடுகள், குணநலன்கள் என அனைத்தும் சிதறும் பேராபத்து உள்ளது.
செல்போன்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருவால் நமது நாட்டில் செல்போன்களால் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முதன் முறையாக நாடுமுழுவதும் விரிவானஆய்வு ஒன்றை மேற்கொண்டு வருகிறது. ஒரு நாளைக்கு 4 மணிநேரத்திற்கும் அதிகமாக செல்போன் பேசும் ஆண்கள், 4 மணி நேரத்திற்கும் குறைவாக செல்போன் பேசும் ஆண்கள், செல்போன்களை பயன்படுத்தாத ஆண்கள், 4 மணிநேரத்திற்கும் அதிகமாக செல்போன் பேசும் பெண்கள், செல்போன்களை பயன்படுத்தாத பெண்கள் என 5 குழுவினராக பிரித்து அவர்களுக்கு செல்போன்களால் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சோதனை செய்து கண்டறியப்பட்டு வருகிறது.
செல்போன்கால் நரம்பியல் பாதிப்பு, ரத்தத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, விந்தணுக்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என அனைத்து வகையான பாதிப்புகளையும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் முடிந்தால் இந்தியாவில் செல்போன்களின் பாதிப்பு குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் செல்போன்கள் இன்று அணு உலைகளுக்கு நிகராக மனித குலத்தை அச்சுறுத்தி வருவதாகவே நிபுணர்களும், ஆராய்ச்சியாளர்களும் தெரிவிக்கின்றனர்.

Subscribe to:
Comments (Atom)