
வாகனம் வைத்திருக்கும் சென்னை வாசிகளை சலிப்படைய வைக்கும் விஷயம் பார்க்கிங் கட்டணம். குறிப்பாக கார் வைத்திருக்கும் சென்னை வாசிகள் பொது இடங்களில் வண்டியை நிறுத்த கொடுக்கும் கட்டணம் புலம்பச் செய்து வடும். ஆனால் வெளிநாடுகளை ஒப்பிட்டால் நம்ம ஊரில் தான் கட்டணம் குறைவாம்.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகியுள்ளது.டெல்லி, மும்பை, சென்øன், கோல்கட்டா போன்ற பெருநகரங்கள் மட்டுமின்றி பெங்களூர், ஐதராபாத், சண்டிகர், ஆமதாபாத், நொய்டா போன்ற பல நகரங்களிலும் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. அதுவும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
நகர்புறங்களில் வாகனங்களை நிறுத்துவது என்பது இன்று பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அடுக்குமாடி வீடுகள் தான் அதிகம் என்பதால் வாகனங்களை நிறுத்துவதற்காக பெரும் செலவு செய்து இடம் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பொது இடங்களில் வாகனங்களை நிறுத்தவும் கட்டணங்களே வசூலிக்கப்படுகின்றன.
இந்த கட்டண விகிதங்களை பொறுத்தவரை பெரு நகரங்களில் மிக அதிகமாகவே உள்ளது. உலகம் முழவதும் பார்க்கிங் என அழைக்கப்படும் பொது இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து சர்வதேச பார்க்கிங் கட்டண ஏஜென்சியான கொலாரிஸ் ஆய்வு நடத்தியுள்ளது.இந்நிறுவனம் நடத்தியுள்ள சர்வேயில் சில ஆச்சரியமான தகவல்கள் தெரிய வந்துள்ளன.
சர்வதேச அளவில் நடத்தப்பட்ட இந்த சர்வேயில் இந்தியாவில் இருந்து நான்கு நகரங்கள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த நான்கு நகரில் சென்னையில் தான் குறைவான பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. பெங்களூரில் மிக அதிகமாக ரூ. 70ம், டெல்லியில் ரூ. 60ம், மும்பையில் ரூ. 50ம், சென்னையில் ரூ. 45ம் சராசரியாக பார்க்கிங் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
இதுமட்டுமின்றி உலகம் முழுவதும் முக்கிய நாடுகளில் முக்கிய வளர்ந்த நகரங்களை ஒப்பிட்டால் இந்தியாவில் தான் பார்க்கிங் கட்டணம் குறைவு என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. மேலை நாடுகளில் ஒரு நாளுக்கான பார்க்கிங் கட்டணம் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 250 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் சராசரியாக ஒரு 60 ரூபாய் என்ற அளவில் தான் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment